திடீரென வலியில் துடித்த கர்ப்பிணி!.. 12 கிமீ-க்கு அப்பால் மருத்துவமனை!.. 'இந்த 'பனி'யில என்ன செய்றதுனே தெரியல'!.. அதிரடி முடிவெடுத்த இளைஞர்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காஷ்மீரில் பிரசவ வலியில் துடித்த கர்பிணியை கடும் பனிப்பொழிவிலும் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

திடீரென வலியில் துடித்த கர்ப்பிணி!.. 12 கிமீ-க்கு அப்பால் மருத்துவமனை!.. 'இந்த 'பனி'யில என்ன செய்றதுனே தெரியல'!.. அதிரடி முடிவெடுத்த இளைஞர்கள்!!

காஷ்மீர் பார்முல்லா மாவட்டத்தில் உள்ள ரவியாபாத் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

ஜம்மூ காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு பெய்து வருவதால் அவரின் குடும்பத்தினர் என்னசெய்வதென்று தெரியாமல் பதற்றத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு உதவ முன்வந்த அந்த கிராமத்து இளைஞர்கள் கர்ப்பிணியை கடும் பனிப்பொழிவிலும் தூக்கிச்சென்றுள்ளார். சாலையில் ஒரு அடிக்கு பனிகள் மூடப்பட்டிருந்தாலும், சுமார் 12 கி.மீ தூரம் தூக்கி சென்று அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அப்பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த அக்கிராமத்து மக்கள், அதிகாரிகளுக்கு பல முறை தொடர்பு கொண்டும் அவர்கள் வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், இளைஞர்களின் துரித நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்