“இது என்னடா புது சோதனை? காஷ்மீர் சீனாவுல இருக்கா?”.. ட்விட்டருக்கு எதிராக வலுத்த கண்டனம்! .. அடுத்த சில மணிநேரங்களில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாட்விட்டர் நிறுவனத்தின் ஜியோடேக் பதிவு வரைபடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காஷ்மீரானது, சீனப் பகுதியில் இருப்பதாக பார்வையாளருக்கு காட்டப்பட்டது.
இப்படி காட்டப்பட்டதற்கு இந்திய அளவில் கடுமையான எதிர்ப்பு உருவாகியது. ட்விட்டரில் உள்ள இந்த தவறைக் குறிப்பிட்டு தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் கோகலே கண்டனமும் தெரிவித்திருந்தார். ட்விட்டர் நிறுவன செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், இது ஒரு தொழில்நுட்ப தவறு என்பதையும், அதுகுறித்த விபரங்களை ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்ததாகவும், குறிப்பிட்டிருந்தார். மேலும் பேசியவர், இந்த உணர்வுபூர்வமான விஷயத்தை புரிந்துகொள்வதாகவும், அந்த உணர்வுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை அடுத்து ஜியோடேக் வரைபடப் பிரச்சனையைக் கண்டறிந்து சரிசெய்வதற்கான முனைப்பில் தங்களது தொழில்நுட்பக் குழுவினர் விரைந்து பணியாற்றுவதாகவும விளக்கம் அளித்திருந்தார். அவர் அளித்த இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே ட்விட்டர் நிறுவனம் ஜம்மு காஷ்மீர் சீனாவின் பகுதியாக காட்டப்பட்ட ஜியோடேக் வரைபடத்தை திருத்தி சரி செய்தது.
மற்ற செய்திகள்