இந்த '5 மாநிலங்கள்ல' இருந்து... யாரும் 'எங்க' மாநிலத்துக்கு வராதீங்க... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியா5 மாநிலங்களில் இருந்து யாரும் தங்களது மாநிலத்துக்கு வர வேண்டாம் என கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் இருப்பதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா தொற்று அதிகம் இருக்கும் 5 மாநிலங்களில் இருந்து யாரும் தங்களது மாநிலத்துக்கு வர வேண்டாம் என கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த லிஸ்டில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்று உள்ளன. மேற்கண்ட மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரெயில்கள், மற்ற வாகனங்கள் வர தடைவிதிக்கப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்