பாத்ரூமில் பாதாள அறை.. ரெய்டு விட்ட போலீசாருக்கு கேட்ட வினோத சத்தத்தால் சிக்கிய 3 பேர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகா மாநிலத்தில் பாத்ரூம் சுவரின் உள்ளே ரகசிய பாதை அமைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | "மாப்பிள்ளை போட்ருந்த ட்ரெஸ் பிடிக்கல".. கல்யாண வீட்டுக்குள் பறந்த கற்கள்..கைகலப்பில் முடிந்த திருமணம்..!
பாலியல் குற்றங்கள்
இந்தியா முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க அரசு மற்றும் காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக டெல்லி மற்றும் கர்நாடகாவில் இத்தகைய குற்றங்கள் அதிகரித்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கியது கர்நாடகா போலீஸ். அப்போதுதான் காவல்துறைக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
ரகசிய தகவல்
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ர துர்காவில் ஒரு இடத்தில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள், அந்த கட்டிடம் முழுவதும் தேடியும் யாரும் சிக்கவில்லை. இதனையடுத்து அந்த கட்டிடத்தில் இருந்த டாய்லெட்டை காவல்துறை அதிகாரிகள் பரிசோதிக்கையில் வினோத சத்தம் கேட்டிருக்கிறது.
ரகசிய வழி ஏதும் இருக்கிறதா? எனத் தேடிய போலீசார், டாய்லட் சுவரில் இருந்த கதவை கண்டறிந்தனர். அந்த கதவை திறந்து பார்த்தபோது போலீசார் அதிர்ந்து போயினர். சுவருக்குள் ரகசிய வழியமைத்து உள்ளே பாதாள அறை ஒன்று இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் அந்த அறைக்குள் பதுங்கியிருந்த ஒரு பெண், இரண்டு ஆண்களை கைது செய்தனர். இந்நிலையில் அந்த பெண்ணை காப்பகத்தில் சேர்த்திருப்பதாகவும், கைதான இரண்டு ஆண்களிடத்தில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் பாத்ரூமில் பாதாள அறை அமைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவந்த கும்பலை காவல்துறை கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்