காட்டில் காணாம போன 'நபர்'.. "எங்க தேடியும் கெடக்கலையாம்".. கடைசியில் செல்ல நாய் செய்த நெகிழ்ச்சி காரியம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நபர் ஒருவர் காட்டுப் பகுதிக்கு சென்ற போது தொலைந்து போன நிலையில் அவரைத் தேடி வந்த சமயத்தில் நடந்த சம்பவம் தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

காட்டில் காணாம போன 'நபர்'.. "எங்க தேடியும் கெடக்கலையாம்".. கடைசியில் செல்ல நாய் செய்த நெகிழ்ச்சி காரியம்!!

Also Read | "செத்து போய்ட்டான்னு தான் நெனச்சேன்".. மகன் பத்தி 17 வருஷம் கழிச்சு பெண்ணுக்கு தெரிஞ்ச உண்மை!!

கர்நாடக மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள சுதுரு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சேகரப்பா. இவருக்கு தற்போது 55 வயதாகிறது.

இவர் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு போய் விறகு எடுத்து வருவதை கடந்த 10 ஆண்டுகளாக வழக்கமாக கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தினமும் காலை 6 மணியளவில் விறகு எடுக்கச் செல்லும் சேகரப்பா, பொதுவாக காலை 10 மணிக்குள் வீடு திரும்புவது வழக்கம். மேலும் விறகு எடுத்து வந்துவிட்டு ஐயனூரு டவுனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விறகு எடுக்க காட்டுக்கு போன சேகரப்பா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. வழக்கமான நேரத்தையும் கடந்து விட்டதால் குடும்பத்தினர் பதறிப் போய் இது தொடர்பாக அண்டை வீட்டாரின் உதவியை நாடி உள்ளனர். இதன் காரணமாக சேகரப்பா எங்கே சென்று இருப்பார் என்பதையும் குடுமத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடி வந்துள்ளனர்.

ஆனால் சேகரப்பாவை எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், சேகரப்பா வளர்த்து வந்த செல்லப் பிராணியாக டாமி என்ற நாய் மோப்ப சக்தி கொண்டு தனது உரிமையாளரை தேடி கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நாய் குரைத்ததை கேட்டு மக்கள் அங்கே வந்து பார்த்த போது மரம் ஒன்றின் கீழ் மயங்கி கிடந்த சேகரப்பாவை பார்த்து அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

தொடர்ந்து அவரை மீட்ட மக்கள், மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதிக வெப்பத்தின் காரணமாக சேகரப்பா சோர்வு அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த நாள் இரவே வீடு திரும்பி உள்ளார் சேகரப்பா. பல பேர் தேடியும் காணாமல் போன நபர் கிடைக்காத நிலையில் அவர் பாசமாக வளர்த்து வந்த நாய் கண்டுபிடித்ததுடன் அவரது உயிரை காப்பாற்றிய நாயை கிராமத்தினர் மட்டுமில்லாமல் நெட்டிசன்கள் மத்தியிலும் அதிகம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Also Read | "வயசு 11 தான்".. IQ மதிப்பெண்ணில் ஐன்ஸ்டீன், ஹாக்கிங்கை ஓவர்டேக் பண்ணிட்டாரா? வைரலாகும் சிறுவன்..

KARNATAKA, MAN, PET DOG, FOREST, RESCUE

மற்ற செய்திகள்