ஃபேஸ்புக்ல பார்த்த 'ஒரு ஃபோட்டோ' வாழ்க்கையையே மாத்துமா...! 'என்னடா இனி பண்ண போறோம்னு சோர்ந்து போனவரு...' - இப்போ சும்மா பட்டைய கிளப்புறாரு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா காலத்தில் வேலையில்லாமல் இருந்த இளைஞர் நடமாடும் முடிவெட்டும் கடையை உருவாக்கி கைநிறைய சம்பாதித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் பகுதியை சேர்ந்தவர் ஷிவப்பா. முடிவெட்டும் தொழிலாளியான இவர் இந்த கொரோனா காலத்தில் தன் வேலையை இழந்துள்ளார். இவர் இப்போது செய்து வரும் வித்தியாசமான செயல் உள்ளூர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஒரே ஒரு கால் தான் மொத்த சலூன்னையும் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறார் ஷிவப்பா. அவரிடம் இருந்த ஒரு சிறிய ரக கூட்ஸ் ஆட்டோவை தற்காலிக சலூன் ரூமாக மாற்றி ரீடிசைன் செய்து கொண்டு கர்நாடகாவின் சிக்கமகளூர் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு சென்று மக்களுக்கு ஷேவிங், கட்டிங் உட்பட அவர்கள் எதிர்பார்க்கும் சலூன் சேவைகளை வீட்டு வாசலுக்கே சென்று வழங்கி வருகிறார்.
இதுகுறித்து கூறிய ஷிவப்பா, 'என்னுடைய இந்த புது தொழில் ஒரு வெளிநாட்டவரின் ஃபேஸ்புக் ஃபோட்டோவை பார்த்து வந்தது.
அதோடு முதலில் சலூனில் வேலைப்பார்க்கும் போது மாதம் ரூ .10,000 மட்டுமே சம்பாதித்த தான், தற்போது மொபைல் சலூன் மூலம் நாள்தோறும் குறைந்தது சுமார் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்' எனக் கூறியுள்ளார்
மேலும், சிக்கமகளூர் முழுவதும் தனது வாகனத்தை எடுத்து கொண்டு சுற்றியதன் மூலம் ஷிவப்பா தனது தொலைபேசி எண்ணை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
மற்ற செய்திகள்