கர்நாடகாவில் தேடப்படும் குற்றவாளி.. திருவண்ணாமலையில் சாமியார் வேடம்.. சுற்றி வளைத்த போலீசார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசி தலைமறைவாக இருந்த வாலிபரை திருவண்ணாமலையில் போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவில் தேடப்படும் குற்றவாளி.. திருவண்ணாமலையில் சாமியார் வேடம்.. சுற்றி வளைத்த போலீசார்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அதனால் அப்பெண் வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்றும், அவரது வீட்டிற்கு சென்றும் அடிக்கடி திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த மாதம் 28-ம் தேதி திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண்ணிடம் நாகேஷ் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் அப்பெண் இதற்கு மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகேஷ் தனது பையில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து இளம்பெண் மீது வீசி விட்டு தப்பியுள்ளார். இதில் படுகாயமடைந்த இளம்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து நாகேஷை தீவிரமாக தேடி வந்தனர். மேலும்  அவரது புகைப்படம் அடங்கிய தகவல்கள் குறித்து பல்வேறு இடங்களில் தேடப்படும் குற்றவாளி நோட்டீசை ஒட்டினர்.

Karnataka man arrested in Tiruvannamalai by police

இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தனியார் ஆசிரமத்திற்கு நாகேஷ் அடிக்கடி தியானத்திற்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி திருவண்ணாமலைக்கு வந்த கர்நாடகா போலீசார், காவி உடை அணிந்து தியானம் செய்துகொண்டிருந்த நாகேஷ் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதனை அடுத்து பெங்களூருக்கு அழைத்துச் செல்லும் போது நாகேஷ் போலீசாரிடமிருந்து தப்பி செல்ல முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் நாகேஷ் காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசி விட்டு திருவண்ணாமலையில் சாமியார் வேடமிட்டு வாலிபர் தலைமறைவாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8

POLICE, KARNATAKA, TIRUVANNAMALAI

மற்ற செய்திகள்