'சசிகலா விவகாரத்தில் கெத்து காட்டிய ரூபா ஐபிஎஸ்'... 'அதிரடியாக மாற்றம்'... ஆனால் காத்திருந்த சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து எடியூரப்பா அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசு 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு மாநகர காவல்துறையில் 5 துணை ஆணையாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனிடையே ரயில்வே துறை ஐ.ஜியாக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ் மாநில அரசின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கர்நாடகாவில் உள்துறை செயலாளராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை டி.ரூபா ஐபிஎஸ் பெற்றுள்ளார்.
ரூபா ஐபிஎஸ் இந்த பெயரைக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்ட நேரத்தில், அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு விஐபி சலுகைகள் அளிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்த விவரங்களை ரூபா ஐபிஎஸ் தெரியப்படுத்த அது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சசிகலா சிறையில் விருப்பம் போல இருக்க, கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணா ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
ரூபா வெளியிட்ட தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் டி.ரூபா முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமானதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களூருவில் ரயில்வே துறை ஐ.ஜியாக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ் தற்போது கர்நாடக மாநில அரசின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகக் கருதப்படுகிறது.
I've assumed charge as Home Secretary,Govt of Karnataka. Incidentally, I learnt that I am the first woman in that post.
— D Roopa IPS (@D_Roopa_IPS) August 4, 2020
ಇವತ್ತು ಗೃಹ ಇಲಾಖೆ ಕಾರ್ಯದರ್ಶಿಯಾಗಿ ಪ್ರಭಾರ ವಹಿಸಿಕೊಂಡೆ. ಆ ಹುದ್ದೆಯಲ್ಲಿ ನಾನು ಪ್ರಥಮ ಮಹಿಳೆ ಎನ್ನುವುದು ತಿಳಿಯಿತು. Thanks for all your wishes. https://t.co/d1v8wixsCa
மற்ற செய்திகள்