பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் விவகாரத்தில் இன்று தீர்ப்பு அளித்து இருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்.
"சண்டைக்கு தயாரா?"... ரஷ்ய அதிபர் புதினுடன் நேருக்கு நேர் சவால் .. வைரலாகும் எலான் மஸ்க் ட்வீட்..!
ஹிஜாப் விவகாரம்
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என சில வாரங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது. சில நாட்களிலேயே கர்நாடகா முழுவதிலும் இது தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றன. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை எதிர்த்து சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
இந்த விஷயம் தீவிரமடையவே, மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தார் அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை.
வழக்கு
இதனை அடுத்து உடுப்பி பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் இதுகுறித்து நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். அரசியல் அமைப்பு வழங்கியுள்ள மத சுதந்திரத்தை அரசின் இந்த முடிவு பறிப்பதாக அந்த மாணவிகள் தங்களது மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மாணவர்கள் அனைவரும் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக கர்நாடக அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.
ஹிஜாப் அங்கம் இல்லை
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிகள், "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது இல்லை. ஆகவே, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லுபடியாகும்" எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும், "மாணவர்களுக்கான சீருடையை அரசே நிர்ணயிப்பது ஆர்டிகிள் 25ன் படி சரியானது தான் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், பிப்ரவரி 5 ஆம் தேதி கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணை மாணவர்களின் உரிமைகளை மீறவில்லை" என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, ஹிஜாப் விவாகாரத்தில் மாணவிகள் அளித்து இருந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாதுகாப்பு
இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் விவகாரத்தில் இன்று கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளிப்பதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆறே நாளில் 6000 பெட் .. அவசர அவசரமாக மருத்துவமனை கட்டும் சீனா.. வேகமெடுக்கும் புதிய வைரஸ் காரணமா..?
மற்ற செய்திகள்