மீண்டும் பள்ளி, கல்லூரி & சினிமா தியேட்டர்களில் மாஸ்க் கட்டாயம்.. கர்நாடக அரசு வெளியிட்ட நெறிமுறைகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நான்காம் அலை பரவல் உலக நாடுகளை அச்சுறுத்த துவங்கி உள்ள நிலையில் கர்நாடக அரசு புதிய நெறிமுறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், சளி, இருமல், காய்ச்சல், ஜலதோஷம் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முகக்கவசம் கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் நிறைவடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி, தியேட்டர், பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் மால்களில் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்