‘கொரோனாவால் உயிரிழந்த முதல் இந்தியருக்கு’ சிகிச்சை அளித்த ‘மருத்துவருக்கு’ நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் அந்த நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

‘கொரோனாவால் உயிரிழந்த முதல் இந்தியருக்கு’ சிகிச்சை அளித்த ‘மருத்துவருக்கு’ நேர்ந்த பரிதாபம்!

கர்நாடகாவில் உள்ள கல்புர்கியில் கொரோனா நோய் பாதித்த 79 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், தான் கொரோனா பாதிப்புக்கு இந்தியாவில் உயிரிழந்த முதல் நபர்.  இவரை அடுத்து இந்தியாவில் அடுத்தடுத்து இரண்டு நபர்கள் கொரோனா பாதிப்பினால் பரிதாபமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக கல்புர்கியில் சிகிச்சை பெற்று வந்த அந்த 79 வயது முதியவர் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அந்த முதியவருக்கு சிகிச்சை அளித்த 63 வயதான மருத்துவருக்கு இந்த நோயின் பாதிப்பு உள்ளதாக தற்போது சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து அந்த மருத்துவர்  தனது குடும்ப உறுப்பினர்களுடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை பொருத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்படைந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இது குறித்து பேசிய துணை ஆணையர் பி சரத் பாதிப்பு கண்டறியப்பட்ட பின் அந்த மருத்துவர் தனது குடும்பத்தினருடன் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளார் என்றும், அவர் தனி வார்டுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். மார்ச் 6-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை இந்த மருத்துவர், அந்த முதியவருக்கு சிகிச்சை அளித்ததாகவும், அதனால் இவருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்றும் அம்மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை 10- ஆக அதிகரித்துள்ளது என்று

கர்நாடகா உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஸ்ரீராமுலு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

KARNATAKA, CORONAVIRUSUPDATE