'எவ்வளவு நாள் தான் கடன் வாங்குறது...' 'வேறு வழியில்லாம அத வித்திட்டு...' - பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட நபர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாத சம்பளம் வராதநிலையில் குடும்ப கஷ்டத்திற்காக பேருந்து ஓட்டுநர் ஒருவர் தன் சிறுநீரகத்தை விற்றசம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'எவ்வளவு நாள் தான் கடன் வாங்குறது...' 'வேறு வழியில்லாம அத வித்திட்டு...' - பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட நபர்...!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பஸ் போக்குவரத்துக்கு தடைவிதித்து. இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி பஸ்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தாலும், ஓட்டுநர்களுக்கு குறைந்த அளவில் சம்பளம் தருவதாகவும் ஊழியர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.

இதன்காரணமாக குடும்ப செலவுக்காக பணம் இல்லாத கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ச்சூர் மாவட்டம் கொப்பல் மாவட்டம் குஷ்டகி டவுனில் சேர்ந்த அனுமந்தா கரகெரே என்னும் போக்குவரத்து ஊழியர் மாத சம்பளம் ரூ.16 ஆயிரம் ரூபாய்க்கு பணியாற்றி வருகிறார். இவர் தாய் மற்றும் மனைவி, 3 குழந்தைகளோடு வசித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் மாத சம்பளம் இல்லாமல் அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி காலத்தை கழித்து வந்துள்ளார்.

தற்போது மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையிலும், கடந்த 2 மாதங்களாக அனுமந்தாவுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.3,500 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் அவதி அடைந்த அனுமந்தா வேறு வழியின்றி தனது சிறுநீரகத்தை விற்று அதன் மூலம் வந்த பணத்தில் தான் தற்போது குடும்பத்தை நடத்தி வருகிறார். இதுகுறித்து அனுமந்தா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டும் இருக்கிறார்.

அப்பதிவில், 'போக்குவரத்து கழக ஊழியரான எனக்கு என் வீட்டில் வயதான தாய் உள்ளார். அவருக்கு மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. 3 குழந்தைகளை வளர்க்க வேண்டி உள்ளது. ரேசன் பொருட்கள் கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் எனது குடும்பத்தை காப்பாற்ற எனது சிறுநீரகத்தை விற்று விட்டேன்' என பதிவிட்டுள்ளார்.

இப்பதிவை பார்த்த பலர் அனுமந்தாவுக்கு உதவி புரிந்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் கர்நாடகாவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்