250 பெண்களை வரன் பார்க்க குவிந்த 11 ஆயிரம் பேர்.. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆன சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமூக வலைத்தளங்களில் நாம் அடிக்கடி வலம் வரும் போது நம்மைச் சுற்றி நடக்கும் எக்கச்சக்க செய்திகள் நம் கண்ணில் படும்.
இதில் சில விஷயங்களை நாம் எளிதில் கடந்து போனாலும் சிலவை அதிக அளவில் பேசு பொருளாக கூட மாறும்.
அந்த வகையில் ஒரு செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இன்றைய காலகட்டத்தில், திருமணத்திற்காக வரன் தேட பல்வேறு வழிகளையும் நாடி வருகின்றனர். மேலும் வரனை தேடி பிடிக்கவும் சில புது முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும். இப்படி வரன் தேடுவதற்காக பல ஊர்களில் குடும்பம் குடும்பமாக கூட்டம் அலை மோதுவதையும் கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஒரு நிகழ்வு தான் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
இது மிகவும் ஒரு பேசு பொருளாக மாறுவதற்கு காரணம், 250 பெண்களை வரன் பார்க்க சுமார் 11,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கே கூடியது தான். கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தில் நாகமங்கலா தாலுகா ஆதிசுஞ்சனகிரி தொகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்வு ஒன்று சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
'ஒக்கலிகா மணமக்கள் மாநாடு' என்ற பெயரில் இந்த திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்த நிலையில், சுமார் 11,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் ஜாதகத்துடன் இதில் பதிவு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் வரன் பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் அனைவரும் கலந்து கொண்டதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் உருவானதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
ஆனால், அதே வேளையில், மொத்தம் 250 பெண்கள் மட்டுமே இதில் பதிவு செய்திருந்தனர். 250 வரன்கள் பார்க்க, 11 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்கள் திருமண வரன் நிகழ்வில் கூடிய விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அதே போல, இத்தனை ஆயிரம் பேர் வரன் பார்க்கும் இடத்தில் திரண்ட காரணத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திணறிய நிலையில், இந்த நிகழ்வு ரத்தானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | வேற லெவலில் வைரலாகும் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்! end பஞ்ச் தான் ஹைலைட்டே
மற்ற செய்திகள்