'போதைப்பொருள் சப்ளை'.. அதிரடியாக 'கைது' செய்யப்பட்ட பிரபல 'இளம் நடிகை'.. அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் பெங்களூரில் போதைப்பொருள் வழக்கு தீவிரமாகி வந்த சூழலில் நடிகை ராகினி திவேதி உட்பட தொழிலதிபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பெங்களூரில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையைத் தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னட திரையுலகினருக்கு போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்ட வழக்கில் தமிழ்ப்படங்களிலும் நடித்த இளம் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்