மராட்டிய அரசுக்கு சவால் விடுத்த நடிகை கங்கனா ரணாவத்... அசைக்க முடியாத பாதுகாப்போடு மும்பை வருகிறார்!.. மத்திய அரசு அதிரடி!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை பயணத்தின் போது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மராட்டிய அரசுக்கு சவால் விடுத்த நடிகை கங்கனா ரணாவத்... அசைக்க முடியாத பாதுகாப்போடு மும்பை வருகிறார்!.. மத்திய அரசு அதிரடி!.. என்ன நடந்தது?

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி வருகிறார். வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக மராட்டிய அரசியல்வாதிகள் மற்றும் மும்பை போலீசாரையும் சாடினார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, 'கங்கனா மராட்டியத்தையும் மும்பை போலீசையும் அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வேண்டாம் என்று கூறியிருந்தார். மராட்டிய மந்திரி அனில் தேஷ்முக் கூறும்போது, மும்பை போலீசார் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையானவர்கள். மும்பை போலீசை குற்றம் சாட்டும் கங்கனா ரணாவத்துக்கு மும்பையிலோ அல்லது மராட்டிய மாநிலத்திலோ வாழ உரிமை இல்லை' என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கங்கனா ரணாவத் ட்விட்டரில், "நான் மும்பை வரவேண்டாம் என்று பலரும் என்னை அச்சுறுத்துகிறார்கள். வருகிற 9-ந்தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்" என்று சவால் விடுத்துள்ளார். கங்கனா தற்போது சொந்த ஊரான மணாலியில் தங்கி உள்ளார்.

இதனையடுத்து, கங்கனா ரனாவத்துக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று ஹிமாச்சல் மாநில முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கங்கனா ரனாவத்துக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியுள்ளது. மும்பை வரும் கங்கனாவுக்கு துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள். கங்கனாவின் இல்லத்துக்கும், கங்கனா வெளியே செல்லும் போதும் 'ஒய் பிளஸ்' வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். சுழற்சி முறையில் 7 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்