Kangana Ranaut : “திரௌபதிக்காக கிருஷ்ணர் எழுந்தருளியது போல” - துனிஷா சர்மா மரணம் தொடர்பில் பிரதமரிடம் கங்கனா ரனாவத் கோரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தி சினிமாவில் பிரபல நடிகை துனிஷா சர்மா. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த துனிஷா, பல்வேறு படம் பாலிவுட் படத்தில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் எனும் தொடரில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். இந்த சூழலில் மும்பை அருகே உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
Also Read | பாலைவன பூமியில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை.. கொண்டாடிய மக்கள்.. வைரலாகும் வீடியோ..!
அந்த சமயத்தில் படப்பிடிப்பின் போது மதிய உணவுக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மேக்கப் அறைக்கு துனிஷா சென்றதாக தகவல்கள் கூறுகின்றது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு மூடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்ததாக தகவல்கள் கூறுகின்றது. அங்கே நடிகை துனிஷா சர்மா விபரீத முடிவு எடுத்து இருந்ததைக் கண்டு அனைவரும் பதறிப் போயினர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், துனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடிகை துனிஷா முடிவு விபரீத முடிவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத், கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தம்முடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கங்கனா ரனாவத், “உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் துனிஷா சர்மா பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் இதை தற்கொலை என்று சொல்லிவிட முடியாது. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் இது தொடர்பாக கேட்டுக்கொள்கிறேன். அது என்னவென்றால் திரௌபதிக்காக கிருஷ்ணர் எழுந்தருளியது போல், சீதைக்காக ராமர் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது போல், இது தொடர்பாகவும், பாலகமி மற்றும் ஆசிட் தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும் உடனடியாக மரண தண்டனையை விதிக்க வேண்டும். இந்தியாவில் பெண்களை பாதுகாப்பும் வகையில் இது போன்ற சட்டங்களை மேம்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதில் பாலகமி என்பது சட்டத்துக்கு புறம்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்வது என்று பொருள் ஆகும்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனிதப்பிறவி நிகரற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
Also Read | புதுக்கோட்டை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு போன் மூலமாக ஆறுதல் கூறிய நடிகர் கமல்ஹாசன்..!
மற்ற செய்திகள்