அந்த 'ரெண்டு' விஷயம் ஓகே... அப்டியே 'அதையும்' சொல்லிட்டீங்கன்னா... நல்லா இருக்கும்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மூன்றாம் கட்ட ஊரடங்கு இந்தியாவில் வரும் 17 - ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றியிருந்தார்.

அந்த 'ரெண்டு' விஷயம் ஓகே... அப்டியே 'அதையும்' சொல்லிட்டீங்கன்னா... நல்லா இருக்கும்!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முழுமையாக எதுவும் அறிவிக்காத மோடி, நான்காம் கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். கொரோனா மூலம் நாடு முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.

மோடியின் உரை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நீங்கள் கூறியதில் இரண்டு விஷயங்களை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த கடினமான சூழலில் நாட்டிலுள்ள ஏழைகள் அதிகம் அவதிப்படுகிறார்கள். மேலும் அவர்கள் எதிர் காலத்தை அதிகம் சார்ந்திருக்கிறார்கள். இந்த பொருளாதார திட்டத்தை நாம் அனைவரும் வரவேற்கும் அதே வேளையில், அது என்னுடைய நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு எப்படி கிடைக்கும் என்ற தகவலை நான் எதிர்பார்க்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.