“என் கேரக்டரும் காந்தியை கொல்ல முயல்வதுதான்”.. “என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கத்தான் அது!”.. ராகுலிடம் கமல் நெகிழ்ச்சி! | Rahul Gandhi With Kamal Haasan
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகராகவும், பல ஆண்டுகால சமூக ஆர்வலராகவும், மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியின் மூலம் அரசியல் பிரபலமாகவும் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியுடனான ஒன் டூ ஒன் நேர்காணல் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார்.
முன்னதாக காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு பேசியிருந்த நடிகர் கமல்ஹாசன், “ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன், ராகுல் காந்தி தமிழில் பேசச் சொன்னார். இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ளேன். ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், அதற்காக மட்டும் அவரை என் சகோதரனாக நினைக்கவில்லை. இது இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் கலந்துகொள்ளும் யாத்திரை. அவர் நேருவின் வழியில் வந்தார். நான் காந்தியின் வழியில் வந்திருக்கிறேன்.” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மற்றும் கமல்ஹாசன் இருவரும் பேசுவதாக தற்போது வெளியாகியுள்ள புதிய நேர்காணல் கலந்துரையாடலில், மொழி, கலாச்சாரம், விவசாயம், சீனா உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து விவாதித்து பேசியுள்ளனர். இதனை ராகுல் காந்தி தமது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
இதில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் வட இந்தியாவின் பார்வையை விட தென் இந்தியாவின் பார்வை வித்தியாசப் படுகிறதா நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?” என கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த கமல், ஆம், சிறிது வித்தியாசம் உள்ளதுதான். ஆனால் தலைநகர் டெல்லியும், அசாமும், மேகாலயாவும் கூட இதே பார்வையை கொண்டிருக்கிறது.
அதேசமயம், அந்த வரலாற்றை மறந்து இப்போது நடப்பதை எண்ணி மட்டுமே நாம் கோபம் கொள்கிறோம். தற்போது நான் காந்தியடிகள் பற்றி அதிகம் பேசுகிறேன். முன்பு நான் அப்படி இல்லை. காந்தியடிகளை விமர்சித்திருக்கிறேன். ஒரு காங்கிரஸ்காரராக என் அப்பா, வரலாற்றை படி என சொல்வார். நான் என்னுடைய 24, 25 வயதில், காந்தியடிகள் பற்றி அறிந்து கொண்டேன். அதன்பிறகு இப்போது வரையில் அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகனாகவே மாறிவிட்டேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசியவர், இதை அடிப்படையாக வைத்துதான், நான் ஹேராம் படம் எடுத்தேன். நானும் அந்த படத்தில் காந்திஜியை கொல்ல முயலும் ஒரு கொலையாளியாகத்தான் நடித்தேன். ஆம், காந்திஜியை கொல்ல முயல்பவரின் கதையே ஹேராம் படம். ஆனால் உண்மையை நெருங்க நெருங்க, அந்த கொலையாளி மாறுகிறான், ஆனால் அதுநடக்க தாமதமாகிவிடுகிறது. அதற்குள் அவனுடன் இருந்தவர் அதைச் செய்கிறார். என்ன... அவன் மனம் மாறியவனாகிறான். இது ஹேராம் கதை.” என குறிப்பிட்டார்.
இதை கேட்ட ராகுல் காந்தி, அது உங்களது யோசனையா? என்று கேட்க, ஆம், அதற்கு கமலோ, “ஆம், என் தந்தையாரிடம் நான் கேட்கக் கூடிய மன்னிப்பே அது” என்று பதிலளித்தார்.
Also Read | 2023 ல கெளம்பி.. 2022-ல் விமானம் தரை இறங்கியதா?.. பயணிகளுக்கு காத்திருந்த வினோத சம்பவம்!!
மற்ற செய்திகள்