"உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

"உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!

கொரோனாவை எதிர்த்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தல்பட்டுள்ளது. இந்த நிலையில், விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் நடந்தது. 

இதுபற்றி பேசிய கமல் தனது ட்விட்டரில், “உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல்,

அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்” என்று பதிவிட்டுள்ளார். 

 

மற்ற செய்திகள்