வருங்கால கணவரை கைது செய்து.. பாராட்டுக்களை பெற்ற பெண் எஸ்.ஐ.. ஒரே மாதத்தில் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்..
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த மாதம், வருங்கால கணவரை மோசடி வழக்கில் கைது செய்ததன் பெயரில், பாராட்டுக்களை பெற்ற பெண் சப் இன்ஸ்பெக்டர் குறித்து, ஒரு மாதம் கழித்து தெரிய வந்த தகவல் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | "ஐ.. நாம ஆர்டர் பண்ண போன் வந்துருச்சு.." பார்சல பிரிச்ச இளைஞருக்கு ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜூன்மோனி ரபா. இவர் அதே பகுதியில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவரது திருமணம் தொடர்பாக, ஜூன்மோனியின் பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். அதன் படி, ராணா போகாக் என்பவருடன் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், ஜூன்மோனிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
வருங்கால கணவர் மீது புகார்
இதனைத் தொடர்ந்து ஜூன்மோனி - ராணா திருமணம், வரும் நவம்பர் மாதம் நடைபெறவும் இரு வீட்டார் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, தன்னை ஒரு ஒஎன்ஜிசி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி என் ஜூன்மோனியிடம் அறிமுகம் செய்துள்ளார் ராணா. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கடந்த மாதம், தனது வருங்கால கணவர் ராணா குறித்து, சில புகார்கள், ஜூன்மோனி காதிற்கு எட்டி உள்ளது. ஒஎன்ஜிசி நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி, மோசடி வேலைகளில் ராணா ஈடுபட்டு வருவது பற்றி, ஜூன்மோனிக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி, தொடர்ந்து ராணா குறித்து ஜூன்மோனி விசாரித்ததில், ஒஎன்ஜிசி அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஏராளமான ஆட்களிடம் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றி மோசடி வேலைகளில் ராணா ஈடுபட்டது உறுதியாகி உள்ளது. மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அவர் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
பாராட்டுக்களை பெற்ற பெண் சப் இன்ஸ்பெக்டர்
இதன் பின்னர், தகுந்த ஆதாரங்களுடன் வருங்கால கணவர் ராணா போகாக்கை, கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜூன்மோனி கைது செய்திருந்தார். மோசடி தொடர்பாக, வருங்கால கணவரை கைது செய்த ஜூன்மோனியை ஏராளமானோர் பாராட்டவும் செய்திருந்தனர். நேர்மையாக பணியாற்றிய ஜூன்மோனிக்கு கூடுதல் பெருமையும் வந்து சேர்ந்தது.
ஒரு மாதத்திற்கு வெளியான தகவல்
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், தற்போது தெரிய வந்த தகவல், பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது. அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன், கட்டிட காண்ட்ரக்டர்கள் சிலர், ஜூன்மோனி ரபா மீது சில புகார்களை அளித்துள்ளனர். ராணா போகாக்குடன் இணைந்து, இருவருமாக ஏமாற்றி பணம் பறித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, ரபாவை போலீசார் கடந்த சில தினங்களாக விசாரித்து வந்த நிலையில், அவர் ராணாவுடன் இணைந்து மோசடி செய்துள்ளது உறுதியாகி உள்ளது. மேலும், ஜூன்மோனி ரபாவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி, சிறையிலும் அடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
மற்ற செய்திகள்