'எம்.பியானது உங்க வீட்டு டாய்லெட்ட கழுவ இல்ல'.. சர்ச்சைக்குரிய பேச்சால் பிரக்யாவுக்கு 'நடந்தது இதுவா?'
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தின் ஷெஹோர் பகுதியில், பாஜக தொண்டர்களின் மத்தியில் பேசிய பாஜகா எம்.பி, பிரக்யா தக்கூர், பொதுவான கட்சி மற்றும் மற்ற விஷய்ங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது தொண்டர் ஒருவர், அங்கிருக்கும் நீர் நிலைகள் மற்றும் கழிவுகள் மேலாண்மை பற்றிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மனு அளித்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய பிரக்யா, ‘நான் உங்கள் தொகுதியில் எம்.பியாகியிருப்பது உங்கள் டாய்லெட்டை சுத்தம் செய்யவோ, சாக்கடைக் கழிவுகளை அகற்றவோ அல்ல. அதையெல்லாம் உள்ளாட்சி பொறுப்பில் உள்ளவர்களை வைத்து பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கெல்லாம் என்னை தொலைபேசியில் அழைக்காதீர்கள். என் வேலை என்னவோ அதை நான் சிரத்தையுடன் செய்வேன்’ என்று அதிரடியாக பேசியுள்ளார்.
இந்த பேச்சு விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், பாஜக எம்.பி பிரக்யா பேசிய இப்பேச்சுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், அதை நட்டாவைச் சந்திக்க பிரக்யா சென்றபோது நேரில் கூறியுள்ளதாகவும், தூய்மை இந்தியா திட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் இனியும் இதுபோன்று பேசுவதைத் தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.