Job Alert : 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF ல் வேலை - சூப்பர் சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள 249 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Alert : 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF ல் வேலை - சூப்பர் சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய தொழிற்பாதுகாப்பு படை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் CISF எனப்படும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை என்பது இந்தியாவின் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்ற முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை ஆகும்.

Job Alert: CISF recruitment for head constable post

வேலைவாய்ப்பு

தற்போது CISF-ல் காலியாக உள்ள 249 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதைக் கீழே காணலாம்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Job Alert: CISF recruitment for head constable post

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்  https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று தலைமை காவலர் பணிக்கான விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து அதனைப் பூர்த்தி செய்து வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: தகுதியுடையோர் ரூ.100 செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

Job Alert: CISF recruitment for head constable post

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி தேர்வு (Physical standard test), சான்றிதழ்கள் / ட்ரையல் டெஸ்ட் (Documentation/ Trial Test) மற்றும் திறன் தேர்வு (Proficiency Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஊதியம்:

தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ. 81,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOB, CISF, மத்தியதொழிற்பாதுகாப்புபடை, வேலைவாய்ப்பு

மற்ற செய்திகள்