“ஆமா.. நாங்கதான் அடிச்சோம்!”.. “ஏன் தெரியுமா?”.. ஜேஎன்யு தாக்குதலுக்கு பொறுப்பேற்பு.. பரபரப்பை ஏற்படுத்திய அமைப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜே.என்.யுவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் புகுந்து அசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் நேற்று முன் தினம் நடத்திய தாக்குதலில் ஆசிரியர்களும், மாணவர்களும் படுகாயமடைந்தனர்.
குறிப்பாக இந்த தாக்குதலில் மாணவர் அமைப்பின் தலைவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். நாடு முழுவதும் சலனத்தை உண்டுபண்ணிய இந்த தாக்குதல் சம்பவம் முறையாக விசாரிக்கப்பட்டு, காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள், அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஹிந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுள்ளதாக
Govt Sources: Claims made by Hindu Raksha Dal Chief Pinky Chaudhary are being investigated. Delhi Police has taken cognizance. To identity masked men in JNU, Police is taking help of video footage as well as face recognition systems https://t.co/oJgxo03IDv
— ANI (@ANI) January 7, 2020
அறிவித்துள்ளது. இதுபற்றி பேசிய ஹிந்து ரக்ஷா தளத்தைச் சேர்ந்த பிங்கி சௌத்ரி, ‘நாட்டுக்கு எதிரான பல நடவடிக்கைகள் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நிகழ்வதாகவும், அதனால் அங்கு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும்’ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து விசாரித்து வருவதாகவும், தாக்குதல் நிகழ்த்திய முகமூடி நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.