VIDEO: "ஹனிமூனுக்கு ஹாஸ்டல் அறையா?...ஸ்டூடண்ட்ஸ் படிக்க வர்ற இடம்யா இது!" ..'அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்...!' - என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

VIDEO: "ஹனிமூனுக்கு ஹாஸ்டல் அறையா?...ஸ்டூடண்ட்ஸ் படிக்க வர்ற இடம்யா இது!" ..'அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்...!' - என்ன நடந்தது?

இந்நிலையில், இம்மாதம் ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஸ்வர்ண குமாரி என்பவர் பெயரில் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் உள்ள அறை ஒன்றை பல்கலைக்கழக அதிகாரிகள் வாடகைக்கு விட்டுள்ளனர்.

வாடகைக்கு வாங்கிய நபர்கள், புதுமண தம்பதியின் முதலிரவுக்காக, இரண்டு நாட்களும் அந்த அறையை நன்றாக அலங்கரித்து முதலிரவும் நடத்தப்பட்டிருக்கிறது.

JNTU Kakinada renting guest house for the first night

இரண்டு நாட்கள் முடிந்தபின், பல்கலைக்கழகத்தை சேர்ந்த மற்ற ஒரு சில அதிகாரிகள் அறை இருந்த கோலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

JNTU Kakinada renting guest house for the first night

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விருந்தினர் மாளிகை அறையை அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றபடி பயன்படுத்தியது குறித்து, விசாரணை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் ஐந்து நபர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்