'இது லிஸ்ட்லயே இல்லயே!'.. அசரவைக்கும் ஜியோவின் ALL IN ONE ப்ளான் பத்தி தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியா125 கோடி பேர் உள்ளதாகக் கூறப்படும் இந்தியாவில் ஜியோவின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
நகரங்களில் 66 கோடியே 27 லட்சம் பேரும் கிராமப்புறங்களில் 50 கோடியே 82 லட்சம் பேரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜியோ ரூ.222, ரூ.333, ரூ.444 மற்றும் ரூ.555 ஆகிய 4 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த 4 திட்டங்களிலும் 2 ஜிபி டெய்லி டேட்டா மற்றும் வரம்பற்ற போன் கால்கள் பேசுவது உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
விவரமாகச் சொன்னால், இவற்றுள் 1000 ஆஃப்-நெட் நிமிடங்களை பேக்குகளும் கிடைக்கின்றன. ரூ.222-ல் 2 ஜிபி 2ஜி டெய்லி டேட்டாவும் ஒரு மாத கால வேலிடிட்டியும் கிடைக்கும். ரூ.333 ப்ளானில் இதே ப்ளான்கள் 2 மாதங்களுக்கும், ரூ. 444 ப்ளானில் இதே ப்ளான்கள் 3 மாதங்களுக்கும் வரம்பற்ற கால்கள் பேசும் வசதிகளுடன் கிடைக்கும்.
ஆக, ரூ.111 சேர்த்து ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்துக்கான வேலிடிட்டி அதிகமாக கிடைக்கிறது. முன்பிருந்த 1.5 ஜிபி ப்ளான்களை விடவும் வசதியாகப் பார்க்கப்படும் இந்த புது ப்ளான்களில் ரூ.444க்கு ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் டேட்டாவுக்கு, முன்பிருந்த ப்ளானில் ரூ.448 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. இதே ப்ளான்களுக்கு முன்பிருந்த ரூ.333 ப்ளானுக்கு நாம் ரூ.396க்கு ரீசார்ஜ் செய்யவேண்டியிருக்கும்.
ஆக, இந்தத் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ஜியோபோனின் வரவுக்கு பிறகு அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போனுடன் ரூ.808 மதிப்புள்ள போனும் கொடுக்கப்பட்டவுள்ளதாகத் தெரிகிறது.