'இன்னைக்கும் கண்டிப்பா திருட வருவாங்க...' 'அவங்கள பிடிக்கவும் முடியாது...' - திருடர்களுக்காக பொதுமக்கள் 'கதவில்' எழுதி வைத்த வாசகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான புண்டாக் பகுதியில் மட்டும், கடந்த 10 நாட்களில் சுமார் ஒரு டஜன் வீடுகளில் திருட்டுகளை நடத்தியுள்ளனர்.
திருடர்கள் ஒரே நேரத்தில் ஒரு வீட்டை மட்டும் குறிவைக்காமல். குழுவாக பிரிந்து பல வீடுகளில் கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்கள் காவல்துறையினரிடம் சிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஜூன் 12, சனிக்கிழமை இரவு, இந்த திருட்டு கும்பல் அப்பகுதியில் மீண்டும் திருட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
முதலில் அந்த திருட்டு கும்பல், அப்பகுதியில் இருக்கும் கல்வித்துறையில் பணிபுரிந்து வரும், ஜிதேந்திர சிங் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து நகைகள், பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடியுள்ளனர்.
மேலும் சில திருடர்கள் வாடகை வீட்டில் வசிக்கும் மனோஜ் அகர்வாலின் வீட்டிலும் புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.
மேலும், மனோஜ் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சஞ்சீவ் குமார் கண்ணா என்பவரின் வீட்டிலும் சென்று கொள்ளையடித்துள்ளனர். இந்த அடுத்தடுத்த கொள்ளை சம்பவம் தொடர்பான புகார்கள் புண்டாக் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டது. ஆனால் திருட்டு கும்பலை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு கதவில், 'எங்கள் வீடு ஏற்கனவே சூறையாடப்பட்டது. எனவே தயவு செய்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்' என திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள் செய்தியையும் அப்பகுதி மக்கள் எழுதியுள்ளனர்.
மற்ற செய்திகள்