சிகிச்சை பலனின்றி... 'இறந்து' போன 21 வயது மகனின் 'இறுதிச்சடங்கை'... லைவ் 'வீடியோவில்' பார்த்து கதறிய குடும்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிகிச்சை பலனின்றி இறந்து போன தங்களது மகனின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் ஒட்டுமொத்த குடும்பமும் பார்த்த துயர சம்பவம் ஜார்க்கண்டில் நிகழ்ந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி... 'இறந்து' போன 21 வயது மகனின் 'இறுதிச்சடங்கை'... லைவ் 'வீடியோவில்' பார்த்து கதறிய குடும்பம்!

ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஜுன் பராய்க்(21) இவர் கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். சமீபகாலமாக மஞ்சள் காமாலையினால் அவதிப்பட்டு வந்த இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் நேற்று  முன்தினம் இறந்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் அவரது உடலை கோவாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு கோவாவிலேயே நடைபெற்றது. அர்ஜுனின் நண்பர் இதனை லைவ் வீடியோவில் அவரது குடும்பத்தினருக்கு காண்பித்தார்.

இதைப்பார்த்து அவரது குடும்பத்தினர் கலங்கி அழுதனர். தொடர்ந்து அவர்களின் பாரம்பரிய முறைப்படி அர்ஜுனின் ஆடைகளை அவர்களது தோட்டத்தில் புதைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை, ''ஊரடங்கு உத்தரவால் எங்களது மகனின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டுவர முடியவில்லை. என்னுடைய சோகத்தை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை,'' என தெரிவித்து இருக்கிறார்.