தீவிபத்தில் தாய், தாத்தா, பாட்டி மரணம்.. "கல்யாணம் நல்லபடியா நடக்கணும்".. திருமணம் முடிஞ்சதும் சொன்ன தந்தை .. நொறுங்கிப் போன மணப்பெண்.!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பெட் மாவட்டம், ஜொரப்ஹடக் என்னும் பகுதியை சேர்ந்தவர் சுபாத் லால். இவர் தனது மனைவி மற்றும் மகளான ஸ்வாதி லால் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். மேலும், சுபாத்தின் பெற்றோரும் அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

தீவிபத்தில் தாய், தாத்தா, பாட்டி மரணம்.. "கல்யாணம் நல்லபடியா நடக்கணும்".. திருமணம் முடிஞ்சதும் சொன்ன தந்தை .. நொறுங்கிப் போன மணப்பெண்.!!

                                                                                                           Images are subject to © copyright to their respective owners

ஜொரப்ஹடக்கில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 4 ஆவது தளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். இதனிடையே ஸ்வாதிக்கும் பெங்களூரில் பணியாற்றி வரும் சவுரவ் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஸ்வாதியின் திருமணம் அவரது வீட்டில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்டபம் ஒன்றில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்வாதி திருமணத்திற்காக தந்தை சுபாத் லால், அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். மறுபக்கம் அலங்காரம் உள்ளிட்ட பிறச் சடங்கு ஏற்பாடுகள் காரணமாக மண்டபத்திற்கு விரைவாக செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால் மணமகள் ஸ்வாதி தனது தோழிகளுடன் மாலை 4 மணி அளவில் வீட்டிலிருந்து மண்டபத்திற்கு சென்று விட்டதாகவும் தெரிகிறது.

அப்படி இருக்கையில் குடும்பத்தினர் தயாராகிக் கொண்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2 ஆவது தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அது வேகமாக பரவி, அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது தளத்திற்கும் சென்றுள்ளது. இதன் காரணமாக நான்காவது தளத்தில் இருந்த சுபாத் லால் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர்.

சுபாத் இந்த விபத்திலிருந்து தப்பித்தாலும் அவரது மனைவி, தாய் மற்றும் தந்தை உட்பட மொத்தம் 15 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனது தாய் உட்பட குடும்பத்தினர் உயிரிழந்தது தெரியாமல் திருமண மேடையேறி உள்ளார் ஸ்வாதி. மேலும், அங்கே இருந்த உறவினர்களுக்கு தகவல் கிடைத்தும் அவர்கள் ஸ்வாதியிடம் சொல்லவில்லை.

மகள் திருமணம் முடிய வேண்டும் என எண்ணி சுபாத் லால் மறைக்க, திருமணம் நல்லபடி முடிந்த பின்னர், ஸ்வாதியிடம் அவரது தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்ததும் மண்டபத்திலேயே கண்ணீர் விட்டு கதறி உள்ளார் ஸ்வாதி. இந்த சம்பவம் பலரது நெஞ்சையும் நொறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

BRIDE

மற்ற செய்திகள்