வாலிபர்களுக்கு 'கர்ப்ப' பரிசோதனை.. 'பெண்களுக்கு' காண்டம்.. வயிறுவலின்னு போனது ஒரு குத்தமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த கோபால் கஞ்சு, காமேஸ்வர் ஜங்கு என்னும் இரு இளைஞர்கள் வயிறுவலி காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளனர். அவர்களை பரிசோதித்த டாக்டர் முகேஷ் குமார் இருவரையும் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளும்படி பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் ஹெச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஹீமோகுளோபின் டெஸ்ட் ஆகியவற்றையும் செய்துகொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் இதுகுறித்து சத்ரா மாவட்ட சிவில் சர்ஜன் அருண்குமார் பாஸ்வானிடம் முகேஷ் குமார் குறித்து புகார் அளிக்க, இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை முகேஷ் குமார் மறுத்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் கிழக்கு சிங்கபூம் மாவட்டத்தை சேர்ந்த வேறொரு மருத்துவர் வயிற்றுவலிக்காக சென்ற பெண் ஒருவருக்கு காண்டம் அணியுமாறு பரிந்துரை செய்திருந்தார். அந்த பெண் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றபின் தான் மருத்துவர் காண்டம் பரிந்துரை செய்த விவரம் அவருக்கு தெரிய வந்துள்ளது.
தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பதால் மருத்துவர்களின் தவறான பரிந்துரை குறித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.