'என் பொண்ணு நிறைமாத கர்ப்பிணி, அவ கதறுறா'... 'ஆம்புலன்ஸை நிறுத்து பா'... நெகிழ வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சுய ஊரடங்கு காரணமாக மருத்துவமனை செல்லும் வழியிலே பிரசவ வலியில் துடித்த மகளுக்கு தந்தையே பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது பலரையும் நெகிழ செய்துள்ளது.

'என் பொண்ணு நிறைமாத கர்ப்பிணி, அவ கதறுறா'... 'ஆம்புலன்ஸை நிறுத்து பா'... நெகிழ வைக்கும் சம்பவம்!

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும் நிலையில், இதுவரை 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலர் அரசின் கண்காணிப்பில் உள்ள நிலையில், நேற்று பிரதமர் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து கேரளா முழுவதும் வெறிச்சோடியது. இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முதலமடை சுள்ளியார் டேம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசன். கூலி தொழில் செய்துவரும் பிரகாசனின் மகள், தேவி நிறைமாத கர்ப்பிணியாவர்.

இதற்கிடையே மருத்துவப் பரிசோதனையில் மார்ச் 29-ந்தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர் கூறிய நிலையில், நேற்று தேவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தந்தை, மகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதையடுத்து தாமதமாக ஆம்புலன்ஸ் வர, மகளை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நடு வழியிலேயே மகள் தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் அவர் கதறி துடித்தார். இதனால் வேறு வழியில்லாமல் ஆம்புலன்ஸை நிறுத்திய தேவியின் தந்தை, அவரே மகளுக்கு பிரசவம் பார்த்தார். இந்நிலையில் சிறிது நேரத்தில் குழந்தையும் பிறந்தது. உடனே குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை துண்டிக்காமல் அப்படியே தாயின் மார்பில் குழந்தையை அணைத்தவாறு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.இந்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KERALA, JANTA CURFEW, PREGNANT WOMAN, AMBULANCE