‘கணவர் இறந்த பிறகு பெண் செய்த காரியம்..’ ஒரு நகரத்தையே மாற்றிய அதிசயம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூருவைச் சேர்ந்த ஜேனெட் யக்னேஸ்வரன் என்ற பெண் தன்னுடைய கணவரது நினைவாக 73 ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.

‘கணவர் இறந்த பிறகு பெண் செய்த காரியம்..’ ஒரு நகரத்தையே மாற்றிய அதிசயம்..

ஜேனெட்டின் கணவர் கடந்த 2005ஆம் ஆண்டு இறந்துள்ளார். அதற்குப் பிறகு அவரது நினைவாக 2006ஆம் ஆண்டு முதல் ஜேனெட் மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளார். இவர் இதுவரை சுமார் 73 ஆயிரம் மரங்களை நட்டுள்ளார். மரங்களை நடுவது மட்டுமில்லாமல் அவற்றைத் தொடர்ந்து பராமரித்தும் வருகிறார்.

ஜேனெட் தன்னுடைய இந்த செயலால் பெங்களூரு நகரத்திலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவர் மரம் நடுவதுடன் மரம் நட்டு வளர்க்க நினைப்பவர்களுக்கு முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.

BENGALURU