மனுஷங்களா அவங்க...? 'அவரு' மனசு எவ்வளவு துடிச்சு போயிருக்கும்...! 'வீடியோவை பார்த்து கண்கலங்கிய எஸ்பி...' - உடனே செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜம்மு காஷ்மீர் பகுதியில் கடலை விற்று பிழைப்பு நடத்திவரும் நபருக்கு காவல்துறை எஸ்பி செய்துள்ள உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரின் போரி கதால் பகுதியில் வசிக்கும் 90 வயதுடைய அப்துல் ரஹ்மான் என்பவர் கடலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சுமார் 1 லட்சம் ருபாய் பணத்தை ரஹ்மான் தன்னுடைய இறுதிச் சடங்குக்காக சேர்த்து வைத்து வந்துள்ளார். இந்நிலையில், சில கேடுகெட்ட எண்ணம் கொண்ட மர்ம நபர்கள் ரஹ்மான் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடிக்கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரை காயப்படுத்தியுள்ளனர்.
பணம் திருடு போன கவலையில் ரஹ்மான் கதறி அழுத வீடியோ யாரோ சிலர் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலாகி சீனியர் எஸ்பி சந்தீப் செளத்ரி அவர்களுக்கும் சென்றுள்ளது. இதனை பார்த்து கலங்கிய சந்தீப் செளத்ரி அப்துல் ரஹ்மானுக்கு தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.
அதோடு, இந்த சம்பவம் குறித்து அறிந்த ஸ்ரீநகர் மாநகரின் மேயர் பர்வைத் அகமது காத்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஹ்மான் புகைப்படத்தை வெளியிட்டு 'ஒரு எளிய மனிதருக்கு மனித நேய உதவியை செய்துள்ளார் காவல்துறை எஸ்பி சந்தீப் செளத்ரி. வெறும் கடலைகளை வைத்து பிழைத்தவருக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி சிறப்பாக கிடைத்துள்ளது' என பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்