முன்னாள் முதல்வர் மகளுக்கு... செல்போனில் 'ஆபாச' அழைப்புகள்... சிக்கிய 3 நம்பர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்னாள் முதல்வர் மகளுக்கு செல்போனில் ஆபாச அழைப்புகள் வந்துள்ளன.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா ஷெரீப் (45). இவர் திருமணமாகி சென்னை ஆர்.ஏ.புரம் கேசவபுரத்தில் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார். இவரின் கணவர் கார் விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய மொபைலுக்கு 3 ஆபாச அழைப்புகள் வந்துள்ளதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஷெரீப் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அது எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிந்து உள்ளனர். தொடர்ந்து அவர்களை பிடிக்க போலீசார் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்