'வச்சது நாங்க தான்...' 'பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு...' 'இது ஜஸ்ட் டிரைலர் தான், அடுத்த முறை...' - அம்பானிக்கு எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் ‘அன்டிலா' அடுக்குமாடி வீடு, மும்பை அல்டாமவுன்ட் சாலையில் உள்ளது.
மொத்தம் 27 மாடிகளை கொண்ட இந்த வீட்டின் அருகே கடந்த வியாழக்கிழமை (25-02-2021) அன்று வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நின்று கொண்டு இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
அந்த காரில் இருந்து 20 ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டது. மேலும் மிரட்டல் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில், 'இது ட்ரெயிலர்தான், அடுத்த முறை குண்டு வெடிக்கும்' என கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.
இதனையடுத்து அம்பானியின் வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிபொருட்களுடன் கார் நின்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, காரை நிறுத்தியவர் மற்றொரு யுனோவா காரில் தப்பிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவத்தில் பயங்கரவாத அமைப்பின் தொடர்பு உள்ளதா என்ற ரீதியிலும் தீவிர விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் காரை நிறுத்தி வைத்ததற்கு 'ஜெய்ஷ்-உல்-ஹிந்த்' என்ற பயங்கரவாத அமைப்பு தற்போது பொறுப்பேற்றுள்ளது.
கடந்த மாதம், டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகிர் நடந்த தாக்குதலுக்கும் இதே அமைப்பு தான் பொறுப்பேற்றிருந்தது.
மற்ற செய்திகள்