'பொண்ணுங்க மேல கை வைக்க யோசிக்கணும்'...'இனிமேல் தப்ப முடியாது'...'ஜெகனின் புதிய அதிரடி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, கடுமையான தண்டனை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட இருக்கும் புதிய சட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

'பொண்ணுங்க மேல கை வைக்க யோசிக்கணும்'...'இனிமேல் தப்ப முடியாது'...'ஜெகனின் புதிய அதிரடி'!

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது பெண்களுக்கான பாதுகாப்பில் பெரிய கேள்விக்கணைகளை எழுப்பியது. இந்நிலையில் பெண் மருத்துவர் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்க முயற்சி செய்தபோது, காவல்துறையினரால் சுட்டு கொல்லபட்டார்கள். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்நிலையில் பெண் மருத்துவரின் விவகாரம் ஆந்திர சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆந்திராவில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது பல சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த பிரச்னை குறித்து விவாதித்தார்கள். அதற்கு பதிலளித்து பேசிய ஆந்திரா முதல்வர், ஜெகன் மோகன் '' பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்து கொள்ள முடியாது. இது போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். பெண்கள் குறித்து வரும் புகார்கள் மீது காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் தொடர்புடைய வழக்குகளில் காவல்துறையினரின் எல்கை குறித்து யோசிக்காமல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கற்பழிப்பு குற்றங்களில் ஒரு வாரத்திற்குள் விசாரணையை முடித்து 3 வாரத்திற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்'' என ஜெகன் தெரிவித்துள்ளார். இதனிடையே 3 வாரத்திற்குள் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ஜெகன் மோகன் தெரிவித்துள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

RAPE, SEXUALABUSE, ENCOUNTER, TELANGANA, JAGANMOHAN REDDY, ANDHRA PRADESH, ASSEMBLY SESSION, ATROCITIES AGAINST WOMEN, SPEEDY TRIAL, 21 DAYS