'கடைசில கண்டுபுடிச்சாச்சு...' 'எங்கிருந்து வந்துச்சுன்னா?...' 'சீனாவுல' இருந்து மட்டும் 'வரல...' 'அது மட்டும் கன்ஃபார்ம்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து, பெங்களூரு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்று எங்கிருந்து வந்து பரவத்தொடங்கியது என்பது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குமார் சோமசுந்தரம், மைனக் மொண்டல், அங்கிதா லாவர்டே உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் ஆராய்ந்தனர்.
அவர்கள், 294 இந்திய கொரோனா வைரஸ் மரபணு வரிசையை ஆராய்ந்து பார்த்தனர். அதில் இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா என்றழைக்கப்படுகிற பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் தோன்றி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த நாடுகள்தான் அதிகளவில் பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் என்று இந்த ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.
இந்திய கொரோனா வைரஸ்களின் 40 சதவீத மாதிரிகள், அறியப்படாத மரபணு வேறுபாடுகளை கொண்டுள்ளன எனவும் தெரிய வந்துள்ளது.
மற்ற செய்திகள்