இஸ்ரேலிய மருத்துவக் குழு இந்திய வருகையின் பின்னணி என்ன?.. வெளியான 'பரபரப்பு' தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில், இஸ்ரேல் மருத்துவக் குழு இந்தியா வந்தடைந்துள்ள சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய மருத்துவக் குழு இந்திய வருகையின் பின்னணி என்ன?.. வெளியான 'பரபரப்பு' தகவல்!

இந்தியா - இஸ்ரேல் மருத்துவ வல்லுநர்கள் இணைந்து கொரோனா தொற்றை விரைவாகக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியின் முதல் கட்ட சோதனை இஸ்ரேலில் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, இந்தியாவில் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளாது.

இதற்காக, இஸ்ரேலிய மருத்துவக் குழு இந்தியா வந்தடைந்துள்ளது. இந்தியா - இஸ்ரேல் கூட்டு முயற்சியில் 4 கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதில், இரு கருவிகள் மூலம் உமிழ் நீரை கொண்டு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை சில நிமிடங்களில் கண்டறிய முடியும்.

குரல் மாதிரி மற்றும் சுவாசிப்பதை வைத்தே தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் வகையில் இரு கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த கருவிகள் பரிசோதிக்கப்பட உள்ளன.

 

மற்ற செய்திகள்