Video: “இல்ல.. எப்படி முடியும்?” - ‘ஒழுங்கா எட்டு கூட போடத் தெரியாத பேயா?’ .. ‘வைரலாகும் வீடியோ’ .. கமெண்ட்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் பல வீடியோக்கள் சில நேரங்களில் நம்ப முடியாத ஆச்சரியம் தருகின்றன.

Video: “இல்ல.. எப்படி முடியும்?” - ‘ஒழுங்கா எட்டு கூட போடத் தெரியாத பேயா?’ .. ‘வைரலாகும் வீடியோ’ .. கமெண்ட்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!

அந்த வகையில் நள்ளிரவு நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்று தானாகவே நகர்ந்து யூடர்ன் போட்டு கீழே விழுந்துவிடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து பலரும் இந்த பைக்கை பேய் இயக்கிவிட்டதாகவும் கூறி வருவதை காண முடிகிறது.

இன்னும் சிலர் சற்று நகைச்சுவையாக பைக்கில் எட்டு போடும் ஆடிஷனில் பேய் தோல்வியை தழுவி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இன்னொருவர் ஒரு படி மேலே போய், பிரபல டெஸ்லா நிறுவனம்தான் இந்த பைக்கை அண்மையில் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இந்த பைக்கின் லாக் ஏதாவது பழுதடைந்து இருக்கலாம். அப்போதுதான் இப்படியான சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உண்டு என்று ஒருவர் தெரிவித்திருக்கிறார். இன்னும் சிலர் எலக்ட்ரிக்கல் ஒயரிங் பிரச்சனை இருந்தால் இப்படி நடக்கும் அதிலும் இந்த பைக்கின் கியர் ஆனில் இருக்கிறது அதனால் இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் இது எதனால் என்பது குறித்த சரியான முடிவுக்கு இந்த தகவல்களின் அடிப்படையில் வரமுடியவில்லை என்றாலும் இந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்ட பகிரப்பட்டு வருகிறது.

ALSO READ: வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு? - வெளியான பரபரப்பு தகவல்.

மற்ற செய்திகள்