'முகக்கவசம் இருந்தாலும் இப்படி கூட வைரஸ் பரவலாம்' ... மருத்துவ நிபுணர்கள் எச்சரிப்பது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டி மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்தி வரும் நிலையில், கண்கள் மூலம் கூட வைரஸ் உடலினுள் நுழைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

'முகக்கவசம் இருந்தாலும் இப்படி கூட வைரஸ் பரவலாம்' ... மருத்துவ நிபுணர்கள் எச்சரிப்பது என்ன?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அடிக்கடி கை, கால்களை சோப் அல்லது சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் எனவும், பொது இடங்களில் செல்லும் போது சமூக விலகலை கடைபிடிக்கவும், முகக் கவசங்களை அணிந்து செல்லவும் அரசு வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் முகக்கவசம் அணிந்து பொது இடங்களில் செல்வது பெரிதாக பயனளிக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது ஒரு அறையினுள் பயன்படுவதை விட குறைவான அளவே முகக்கவசங்கள் திறந்தவெளிகளில் பயன்படுகின்றன. இருமல், தும்மலில் உருவாகும் நீர்த்திவலைகளை முகக்கவசங்கள் தடுத்து விடும். ஆனால் காற்று நீர்த்திவலைகள் முகக்கவசம் வழியாக எளிதில் நுழைந்து விடும் என்கின்றனர்.

மேலும், முகக்கவசங்கள் ஈரமாகிவிட்டால் உடனே அதனை மாற்ற வேண்டும் என்றும், முகக்கவசம் அணியும்போது மூக்கு, வாய் ஆகியவற்றை சேர்ந்து மூடியிருப்பது போன்று அணிய வேண்டும் எனவும் மருத்துவ துறையினர் அறிவுறுத்துகின்றனர். முகக்கவசம் அணியும் பொது அதனை நேராக அணிய வேண்டும். கோணலாக அணிந்து கொண்டு அடிக்கடி அதனை சரிசெய்தால் கை முகத்தில் பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கின்றனர்.

MASK, CORONA AWARENESS