‘Tea குடிக்குறது விஷயம் இல்ல..’.. ‘ஆனா இத கவனிக்கலனா பெரிய ஆபத்து காத்துகிட்டு இருக்கு!’.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பேப்பர் கப்பில் டீ அருந்துபவர்கள் 75 ஆயிரம் நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை சேர்த்து அருந்துவதாக, கரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘Tea குடிக்குறது விஷயம் இல்ல..’.. ‘ஆனா இத கவனிக்கலனா பெரிய ஆபத்து காத்துகிட்டு இருக்கு!’.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

பேப்பர் கப்களின் மேற்பரப்பில், பாலித்தீன் மற்றும் கோ பாலிமர்களால் ஆன hydro propane பூசப்படுகிறது. சூடான தேநீர் அல்லது தண்ணீரை பேப்பர் கப்களில் ஊற்றும்போது மைக்ரோ பிளாஸ்டிக் உருகி, நம் உடலின் செல்லக்கூடும்.  நூறு மில்லி சூடான திரவத்தில் 25 ஆயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன.

ஒருவர் பேப்பர் கப்களில் நாளொன்றுக்கு மூன்று முறை தேநீர் அருந்தினாலே போது, அவர் 75 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்ள நேரிடும் என்பதும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பேப்பர் கப்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது உடல் நலத்திற்கும் கேடு விளைவிப்பவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்