வரும் தேர்தலில்... 'ஆன்லைன்'ல ஓட்டு போட முடியுமா?.. எப்போது?.. எப்படி?.. தேர்தல் ஆணையம் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்கும் முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

வரும் தேர்தலில்... 'ஆன்லைன்'ல ஓட்டு போட முடியுமா?.. எப்போது?.. எப்படி?.. தேர்தல் ஆணையம் விளக்கம்!

வெளிநாடு வாழ் இந்தியர்களை தேர்தலில் வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு தூதரகங்களில் வாக்குச் சாவடிகளை அமைத்து வாக்களிக்க உதவலாம் என்று ஏற்கனவே முன்மொழியப்பட்டது.

மேலும் ஓ.டி.பி., லிங்க் அல்லது மெயில் போன்றவற்றை அனுப்பி இணையம் வழியில் வாக்களிக்க வழிவகை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  சீதாராம் யெச்சூரி எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளது.

அதில் இணைய வழியில் மின்னணு முறையில் வாக்களிக்கும் முறை இறுதி பரிந்துரையாக சட்டத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் வாக்களிக்க வழிவகை செய்து சட்டம் இயற்றப்பட்டால், அடுத்து நடைபெறும் தேர்தலில் உடனடியாக அமல்படுத்தப்படும் என கூறி உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணைய முறையில் வாக்களிக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் வெளிநாட்டில் வாழ்பவர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

 

மற்ற செய்திகள்