'PEPPER SPRAY அடிக்க கூடாதுனு சட்டம் ஒன்னும் இல்லயே?.. 'பெண்களே தயாரிச்சுக்கலாம்!'.. 'எப்படி?' ஐபிஎஸ் அதிகாரி! வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டில் பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பல்வேறு வகையான குற்றங்களுக்கு நடுவே, வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்குள் பெண்களின் பாடு, பெரும் பாடாக இருக்கிறது.
பெண்களின் தற்காப்புக்காக பெப்பர் ஸ்பிரேயினை பயன்படுத்துவது கூடாது என இதுவரை எந்த சட்டமும் இல்லை என்பதால், ஒரு கைப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லும் அளவுக்கு சிறிய பெப்பர் ஸ்ப்ரே ஒன்றை பெண்களே தயாரித்துக்கொள்வதற்கான செய்முறை விளக்கத்தை ஐபிஎஸ் சௌமியா சாம்பசிவம் கடந்த 2017-ஆம் ஆண்டு, சிம்லாவில் இருக்கும்போது சில பெண்களுக்கு வழங்கினார். அந்த வீடியோதான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
அதற்கு சிறிது மிளகாய்ப் பொடியை ஒரு குவளையில் போட்டுக்கொள்ள வேண்டும், அந்த மிளகாய்ப் பொடி எதிராளியை வீழ்த்தும் அளவுக்கு அதிகமாகவும், தவறிப்போய் நமக்கு ஆபத்தாய் ஆகிவிடக் கூடாது என்கிற அளவுக்கு குறைவாகவும் இருக்கவேண்டும். அதன்பின், சிறிது மிளகுப் பொடி சேர்க்க வேண்டும். பெப்பர் ஸ்பிரேயினை ஒருவர் மீது அடித்தவுடன் அவருக்கு தாங்க முடியாத அளவுக்கு எரிச்சல் உண்டாகும். அதே சமயத்தில் மிளகுப் பொடிதான், முகத்தில் மிளகாய்ப் பொடி படுவதற்கு முன், மூக்கால் நுகரப்பட்டு கார நெடியை உண்டாக்கும்.
Soumya Sambasivan, IPS, Himachal Pradesh. She’s teaching a group of ladies how to prepare a Pepper Spray to ward of eve teasers who attack women. Since the establishment all over the world has failed to protect women it is better that women learn to protect themselves.🙏🏽🙏🏽🙏🏽 pic.twitter.com/V9boYLrWOt
— RD SINGH (@RD_BANA) December 2, 2019
அதனுடன் சிறிது எண்ணெயும், ஒரு வருடத்துக்கேனும் இந்த பெப்பர் ஸ்பிரே கெட்டுப் போகாமல் இருப்பதற்காக, இதனுடன் அசிட்டோனையும் சேர்க்க வேண்டும். அசிட்டோன் என்கிற வேதிமம், நகத்தை பாலிஷ் செய்ய உதவும் நக பாலிஷரில் இருக்கிறது. அது எந்த பிராண்டாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றையெல்லாம் சேர்த்து கலக்கி, வடிகட்டி சிறிய பயன்படுத்தப்பட்ட ஸ்ப்ரே பாட்டில்களிலோ, செண்ட் பாட்டில்களிலோ ஊற்றி வைத்துக் கொள்ளலாம். பைகளில் கொண்டு செல்லலாம்.