'நடுவானில் விமானம் பறக்கும்போது'.. ‘மோசமான’ விளம்பரத்தால் மர்மப்பெண் ஊழியரைத் தேடும் பிரபல ஏர்வேஸ் நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன ஊழியர் ஒருவர் பறக்கும் விமானத்தில் பயணிகளுக்கு பாலியல் சேவை அளிப்பதாக விளம்பரம் செய்ததாக வெளியான தகவலை அடுத்து தற்போது அந்த ஊழியர் யாரென கண்டுபிடிக்க முனைப்பில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், குறித்த அந்த ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்வதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பறக்கும் விமானத்தில் பயணிகளுக்கு உடல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வதாக விளம்பரப் படுத்திய குறிப்பிட்ட அந்த ஊழியர், முகத்தை வெளிக்காட்டாமல் தான் அளிக்கும் சேவைகளை அதில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த சேவை தேவை என்போர் 50 பவுண்டுகள் முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும் ஆனால் தேவைக்கேற்ப சேவைக்கட்டணம் மாறுவதாகவும் சமூக ஊடக பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்துள்ளார். மேலும் தேவை இருப்பவர்கள் விமான ஊழியர்கள் தங்கும் ஹோட்டலிலேயே அறையை முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அந்த ஊழியர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்தே பணியாற்றுவதாகவும், “எல்லா நேரங்களிலும் எங்கள் சக ஊழியர்களிடம் இருந்து மிக உயர்ந்த தரத்திலான நடத்தையை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” பிரிட்டிஷ் ஏர்வேஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் சர்ச்சைக்குரிய அந்த பெண் ஊழியர் கண்டுபிடிக்கப் பட்டால் உடனடியாக அவர் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சமூக ஊடகத்தில் குறிப்பிட்ட பெயரில் அடையாளம் காணப்பட்ட அந்த ஊழியர் தற்போது அந்த ஐடியை நீக்கிவிட்டதாக தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்