சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைப்பு!.. மத்திய அரசு அறிவிப்பு!.. ஏன்?.. விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைப்பு!.. மத்திய அரசு அறிவிப்பு!.. ஏன்?.. விவரம் உள்ளே!

வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டிவிகிதம் 4% லிருந்து 3.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்புநிதி என்று சொல்லப்படும் PPF வட்டிவிகிதம் 7.1%லிருந்து 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுகால வைப்புத்தொகைக்கான வட்டி 5.5% லிருந்து 4.4%ஆக குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதம் 7.4% லிருந்து 6.5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

குறைக்கப்பட்ட வட்டிவிகிதங்கள் அனைத்தும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வட்டிவிகிதங்கள் அமல்படுத்தப்படாது என்றும், பழைய வட்டிவிகிதங்களே தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்