'விறுவிறுப்பாக போன பேட்மிண்டன்'... 'திடீரென அசையாமல் நின்ற இன்ஸ்பெக்டர்'... 'அடுத்த நொடி நடந்த துயரம்'... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. அப்படி ஒரு எதிர்பாராத சம்பவம் தான் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு நடந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பகவான் பிரசாத். இவருக்கு பேட்மிண்டன் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் இவர் தினமும் தவறாமல் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் அரங்கத்திற்குச் சென்று விளையாடி விட்டுத் தான் பணிக்குக் கிளப்பிச் செல்வார்.
அந்த வகையில் நேற்று காலை தனது நண்பர்களுடன் பகவான் பிரசாத் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டு விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த நிலையில், பகவான் பிரசாத் திடீரென சற்று நேரம் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். அவரது நண்பர்கள் என்ன ஆச்சு என கேட்க வருவதற்குள், அப்படியே சுருண்டு கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அருகில் வந்து அவரை தட்டி எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் தொடர்ந்து மயக்கமுற்று இருந்ததை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் பகவான் பிரசாத்திற்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு தான் அவரது மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவித்தனர்.
பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த காவல்துறை ஆய்வாளரின் வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்