கொரோனா ரணகளத்துக்கு மத்தியிலும்... 'சூப்பரான' செய்தி சொன்ன சுகாதாரத்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா உச்ச வேகத்தில் பரவி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா சிகிச்சை பெற்று மீள்பவர்களின் விகிதம் அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தினமும் சோதிக்கப்படும் கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,90,730 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தமாக 68,07,226 பேருக்கு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, 2,27,755 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 13,925 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் தற்போது 55.49 சதவீதமாக உயர்ந்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்