'உண்மையிலேயே ஹேப்பி நியூ இயர் தான்!'.. ‘இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள முதல் கொரோனா தடுப்பூசிகள்!’.. DCGI அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் 'கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு' இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

'உண்மையிலேயே ஹேப்பி நியூ இயர் தான்!'.. ‘இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள முதல் கொரோனா தடுப்பூசிகள்!’.. DCGI அதிரடி!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் அளிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஏற்கனவே பிரிட்டனில் தொடங்கி உலகின் பல நாடுகளிலும் ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, சீரம் நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசி மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் ஆகியவை தடுப்பூசி தயாரிப்பினை முன்னெடுத்துக் கொண்டிருந்தன.

இந்த நிலையில் தான், ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ-டெக் நிறுவனம், தமது தயாரிப்பான கோவக்சின்  தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை மத்திய மருந்து தரம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு பரிசீலித்து வந்தது.

இதனை அடுத்து,  நிபந்தனைகளுடன் அவசரகால பயன்பாட்டுக்கு பாரத் பயோ-டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கலாம் என மத்திய மருந்து தரம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. இதேபோல் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கலாம் என நிபுணர் குழு முன்னதாக பரிந்துரை செய்திருந்தது.

எனினும் இது தொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இதுபற்றிய இறுதி முடிவை எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், விரைவில் இந்த தடுப்பூசிகளும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுபற்றி பேசிய சீரம் நிறுவன தலைவர்  ஆதார் பூனவல்லா, “SerumInstIndia தடுப்பூசியை சேகரித்து வைத்து, இறுதியாக செலுத்தத் தொடங்குகிறது. இந்தியாவின் முதல் COVID-19 தடுப்பூசியாக கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பானது, பயனுள்ளது மற்றும் வரும் வாரங்களில் போடப்பட தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்