'ஒரு வழியா முடிவுக்கு வரும் கொரோனா???'... 'அந்த லிஸ்ட்டுல இந்தியா தான் டாப்ல இருக்கு!!!'... 'வெளியான பெரும் நம்பிக்கை தகவல்!!!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா 150 கோடி கொரோனா தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

'ஒரு வழியா முடிவுக்கு வரும் கொரோனா???'... 'அந்த லிஸ்ட்டுல இந்தியா தான் டாப்ல இருக்கு!!!'... 'வெளியான பெரும் நம்பிக்கை தகவல்!!!'...

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் தயாரிக்கும் பணி பல நாடுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களில் அதில் சில தடுப்பூசிகளின் இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அவற்றில் குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடெர்னா ஆகிய இரு நிறுவனங்களின் தடுப்பூசிகள் கொரோனாவை தடுப்பதில் 90 சதவீதத்திற்கும் மேல் திறனுடன் இருப்பதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அவற்றிற்கு டிமாண்ட் எகிறியுள்ளது. 

Indias Confirmed Covid-19 Vaccine Dose Purchases Cross 1.5 Billion

ஏற்கெனவே அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் பல கோடிக்கணக்கான தடுப்பூசி டோஸ்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், உலகளவில் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய இருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதில் முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இருக்கின்றன. இருப்பினும் உறுதியாக இதுவரை ஆர்டர் செய்யப்பட்டுள்ள தடுப்பூசி எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை காட்டிலும் இந்தியாவே முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indias Confirmed Covid-19 Vaccine Dose Purchases Cross 1.5 Billion

அதாவது இந்தியா இதுவரை 150 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியம் 150 கோடி தடுப்பூசிகளுக்கும், அமெரிக்கா 100 கோடி தடுப்பூசிகளுக்கும் ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் முதற்கட்டமாக யாருக்கு தடுப்பூசி போடலாம் என்பதை கண்டறிவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட சூழலில், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போன்றோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்