அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. குடும்பத்துடன் ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சத்தீஸ்கர் மாநிலத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து கரம்பிடித்திருக்கிறார் ரஷ்ய இளம்பெண். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவ, பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. குடும்பத்துடன் ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்..!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | காதலிக்கு 'காதலர் தின' GIFT கொடுக்க இளைஞர் செய்த தகிடுதத்தம்.. கையோடு போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் சிங். வர்த்தகரான இவருடைய மகன் அமித் சிங் டெல்லியில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். அப்போது, அதே நிறுவனத்திற்காக ரஷ்யாவில் வெரோனிகா எனும் இளம்பெண் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலை நிமித்தமாக வெரோனிகா டெல்லி வந்திருக்கிறார். அப்போது அமித் - வெரோனிகா இடையே நட்பு மலர்ந்திருக்கிறது. காலப்போக்கில் இது காதலாக பரிணமித்திருக்கிறது.

இது தொடர்பாக அமித் மற்றும் வெரோனிகா தங்களது குடும்பத்தினருடன் பேசி இருக்கின்றனர். இருவர் வீட்டிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே, இவர்களது திருமணம் பெல்ஹா பகுதியில் விமர்சையுடன் நடைபெற்றிருக்கிறது. இதற்காக வெரோனிகா தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இந்து மரபுப்படி ஒவ்வொரு திருமண சடங்குகளும் நடைபெற்றிருக்கின்றன.

Indian Youth tie knot to Russian woman in India pic goes viral

Images are subject to © copyright to their respective owners.

திருமணத்திற்கு முந்தைய 'ஹல்தி' மற்றும் 'மெஹந்தி' சடங்குகள் முறையே வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மணமகன் மற்றும் மணமகளின் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்பட்டது. வெரோனிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய திருமண சடங்குகள் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்றாலும் ஆர்வத்துடன் சடங்குகளை மேற்கொண்டிருக்கின்றனர். இதை தொடர்ந்து திருமணம் நடைபெற்றிருக்கிறது.

Indian Youth tie knot to Russian woman in India pic goes viral

Images are subject to © copyright to their respective owners.

அப்போது மேற்கொள்ளப்பட்ட சடங்குகள் குறித்து ஆங்கிலத்தில் வெரோனிகாவின் குடும்பத்தினருக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனையடுத்து, நெட்டிசன்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

Also Read | ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர்.. விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்..!

LOVE, MARRIAGE, INDIAN YOUTH, RUSSIAN WOMAN

மற்ற செய்திகள்