கேம்பஸ் இண்டர்வ்யூவில் இந்திய மாணவரை செலெக்ட் செய்த கூகுள் நிறுவனம்.. சம்பளத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய மாணவர் ஒருவரை கேம்பஸ் இன்டெர்வியூ மூலமாக பணியமர்த்தியுள்ளது கூகுள் நிறுவனம். இவருக்கு ஆண்டுக்கு 1 கோடிக்கும் அதிகமாக ஊதியம் வழங்க இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
கேம்பஸ் இண்டர்வ்யூ
பொதுவாகவே பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள், இறுதி ஆண்டில் தங்களது கல்லூரியில் நடைபெறும் கேம்பஸ் இண்டர்வ்யூ-வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, உலகளாவிய மென்பொருள் நிறுவனங்களில் வேலை கிடைக்க உழைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. காரணம், நினைத்துப் பார்க்க முடியாத ஊதியம், பல்வேறு சலுகைகள் என திறமையான மாணவர்களுக்கு அள்ளி வழங்க பல முன்னணி நிறுவனங்களே தயாராக இருக்கின்றன.
அதுமட்டும் அல்லாமல், திறமையான ஊழியர்களை தக்கவைக்கவும் பெருநிறுவனங்கள் கணிசமாக அளவு ஊதியத்தை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள Indian Institute of Information Technology (IIIT)-ல் பயிலும் பொறியியல் மாணவர் ஒருவரை பணியில் அமர்த்தி உள்ளது கூகுள்.
கூகுள்
உலகின் முன்னணி நிறுவங்களுள் ஒன்றான கூகுள், IIIT யில் M.Tech படித்துவரும் பிரதாம் பிரகாஷ் குப்தா என்னும் மாணவரை பணியமர்த்தியுள்ளது. இக்கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற கேம்பஸ் இன்டெர்வியூவில் உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், அமேசான், பேஸ்புக், ஆப்பிள், நெட்பிளிக்ஸ் ஆகியவை போட்டிபோட்டுக்கொண்டு மாணவர்களை எடுத்திருக்கின்றன. இவற்றுள் பிரகாஷ் குப்தாவே அதிக ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டவராவார்.
இவருக்கு ஆண்டுக்கு 1.4 கோடி ரூபாய் (மாதத்திற்கு 11.6 லட்சம்) ஊதியம் தர இருப்பதாக அறிவித்திருக்கிறது கூகுள். இவர் விரைவில் லண்டனில் உள்ள கூகுள் அலுவலகத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்ற இருக்கிறார்.
கோடிகளில் சம்பளம்
குப்தா மட்டுமின்றி, IIIT யின் M.Tech 2022 பேட்ஜை சேர்ந்த அனைத்து மாணவர்களும் கேம்பஸ் இன்டெர்வியூ மூலமாக பல்வேறு நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 5 மாணவர்களுக்கு கோடிகளில் ஊதியம் வழங்க நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. குப்தாவை 1.4 கோடி ரூபாய் ஊதியத்தில் கூகுள் நிறுவனம் வேலைக்கு எடுத்ததை போலவே, அனுராக் மகதே என்னும் மாணவருக்கு 1.25 கோடி ரூபாய் ஊதியம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். அதேபோல, இதே பேட்ஜை சேர்ந்த அகில் சிங் என்பவரை ருப்ரிக் நிறுவனம் ஆண்டுக்கு 1.2 கோடி ரூபாய் ஊதியத்திற்கு பணியமர்த்த இருப்பதாக அறிவித்திருக்கிறது.
மற்ற செய்திகள்